×

தேர்தல் பாதுகாப்பு பணி போலீஸ் தனிப்பிரிவுக்கு 12 பேர் நியமனம்

 

திண்டுக்கல், பிப்.24: திண்டுக்கல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள போலீஸ் தனிப்பிரிவுக்கு 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஒருசில வாரங்களில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதையொட்டி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடக்கின்றன. மேலும் தேர்தல் பணியில் ஈடுபடுத்த அரசு அலுவலர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு தயாராக உள்ளன. மேலும் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதேபோல் தேர்தலில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பு அளிப்பது மிகவும் முக்கியமானது. எனவே பாதுகாப்பு தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வதற்கு வசதியாக மாவட்டந்தோறும் போலீஸ் தேர்தல் தனிப்பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் தேர்தல் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது.

இந்த தேர்தல் தனிப்பிரிவுக்கு இன்ஸ்பெக்டர் சஜூகுமார், சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி மற்றும் 10 போலீசார் என மொத்தம் 12 பேர் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலுக்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளில் தனிப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக போலீஸ் நிலையம் வாரியாக வாக்குச்சாவடிகளின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

The post தேர்தல் பாதுகாப்பு பணி போலீஸ் தனிப்பிரிவுக்கு 12 பேர் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,election security task police unit ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்லில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்