×

போலீஸ் விசாரணை உப்பிலியபுரம் அன்புநகர் அரசு துவக்கப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு

துறையூர்: திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பேரூராட்சிக்குட்பட்ட அரசு துவக்கப்பள்ளியில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிடத்தை எம்எல்ஏ ஸ்டாலின்குமார் திறந்து வைத்தார். உப்பிலியபுரம் பேரூராட்சி அன்புநகரில் அரசு துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி நூறு வருடத்திற்கு மேல் பழமையானது. இப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமாரிடம் கோரிக்கை வைத்தனர். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று எம்எல்ஏ தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.27 லட்சம் நிதி ஒதுக்கி மேற்படி பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் கூடுதலாக கட்டி முடிக்கப்பட்டது. இதனை எம்எல்ஏ ஸ்டாலின்குமார் திறந்து வைத்து குத்து விளக்கேற்றி வைத்தார். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் முத்துச்செல்வன், அசோகன், பேரூராட்சி தலைவர் சசிகலா தேவி, நகர செயலாளர் நடராஜன், கோட்டப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மெர்சி மரியதாஸ், முன்னாள் பேரூராட்சி தலைவர் சுமதி, பேரூராட்சி உறுப்பினர்கள் சுப்பிரமணி, ஆசை, ஓய்வுபெற்ற பேராசிரியர் பன்னீர்செல்வம், அரசு அதிகாரிகள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post போலீஸ் விசாரணை உப்பிலியபுரம் அன்புநகர் அரசு துவக்கப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Anbunagar Govt Primary School ,Uppiliyapuram ,Dharayur ,MLA ,Stalinkumar ,Trichy district ,Anbunagar ,Uppiliyapuram Anbunagar Government Primary School ,
× RELATED பச்சைமலை புதூர் அருகே ரூ.33.50 லட்சம்...