×

சோபனபுரம் அரசு பள்ளியில் பாதபூஜை விழா

துறையூர்: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே சோபனபுரம் அரசு உய்ரநிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்யும் விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. சோபனபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியியிலிருந்து நடப்பாண்டு பொதுத்தேர்வினை 73 மாணவ, மாணவியர்கள் எழுத உள்ளனர். தற்போது இவர்கள் மாதிரித் தேர்வு எழுதி பயிற்சி பெற்று வருகின்றனர். பொதுத்தேர்வு மார்ச் 26ம் தேதி துவங்குகிறது. இந்த நிலையில் பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் தேர்வுக்கு முன் தங்கள் பெற்றோர்களின் நல்லாசி பெற வேண்டி பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்யும் நிகழ்ச்சி பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் ஜோதிமன்னன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

The post சோபனபுரம் அரசு பள்ளியில் பாதபூஜை விழா appeared first on Dinakaran.

Tags : Pada Pooja Ceremony ,Sophanapuram ,Government School ,Thardiyur ,Chopanapuram Government High School ,Thardiyur, Trichy district ,Sopanapuram Government High School ,Sopanapuram Government ,School ,
× RELATED ஒடுகத்தூர் அருகே பரபரப்பு அரசு...