×

அடையாளம் தெரியாத வாகனம் மோதி கார் டிரைவர் பலி

விராலிமலை: விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விராலிமலை பெரியார் நகரை சேர்ந்தவர் கருப்பசாமி(37). கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு சொந்த வேலை காரணமாக வெளியே சென்று விட்டு மீண்டும் நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு விராலிமலை அருகே உள்ள திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலை மாதிரிபட்டி பிரிவு சாலை அருகே வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் கருப்பசாமி ஓட்டி வந்த பைக் மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கருப்பசாமி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அடையாளம் தெரியாத வாகனம் மோதி கார் டிரைவர் பலி appeared first on Dinakaran.

Tags : Viralimalai ,Karuppasamy ,Periyar, Viralimalai ,Dinakaran ,
× RELATED இலுப்பூர் அருகே கிராமநிர்வாக அலுவலரை தாக்கி செல்போன் பறிப்பு