×

அக்னிவீரர் சேர்க்கைக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

 

திண்டுக்கல், பிப்.24:திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளதாவது: கோயம்புத்தூர் ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகம் மூலம் அக்னிபாத் திட்டத்தின் கீழ் 2024-25ம் ஆண்டுக்கான தேர்வுக்கு திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களான கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை தேனி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ளவர்கள் ஆன்லைன் வாயிலாக மார்ச் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு தேதிகள் ஏப்.22ம் தேதி முதல் நடைபெறும்.

அக்னிவீரர்களின் ஆட்சேர்ப்பு இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும். முதல் கட்டமாக ஆன்லைன் கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு மற்றும் இரண்டாம் கட்டமாக ஆட்சேர்ப்பு உடற்தகுதி தேர்வு நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post அக்னிவீரர் சேர்க்கைக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Collector ,Bouangodi ,Coimbatore Military Recruitment Office ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் மகாவீர்...