×

கோவையில் இன்று திமுக நிர்வாகிகள் கூட்டம்

 

கோவை, பிப். 24: கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாநகர் மாவட்ட திமுக, சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகள் மற்றும் பிஎல்ஏ-2 பூத் கமிட்டி ‌நிர்வாகிகள், அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் பீளமேடு பாலன் நகர் கண்டியப்பன் சமூக கூடத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது.

இதேபோல், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் கூட்டம் கிராஸ்கட் ரோடு மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நடக்கிறது. கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் கூட்டம் கணபதி எல்.ஜி.பி அருகில் உள்ள சி.எம்.திருமண மண்டபத்தில் இன்று காலை 11.30 மணிக்கு நடக்கிறது.

எனவே, மேற்கண்ட 3 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூட்டங்களில், அனைத்து நிர்வாகிகள், பிஎல்ஏ-2 பூத் கமிட்டி ‌நிர்வாகிகள், அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

The post கோவையில் இன்று திமுக நிர்வாகிகள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Coimbatore ,Coimbatore District ,N. Karthik ,Coimbatore District DMK ,Singhanallur Assembly Constituency ,PLA ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!