×

நாமக்கல்லில் விசிக ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குசீட்டு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கோரி நாமக்கல்லில் விடுதலைச் சிறுத்தைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மைய மாவட்ட செயலாளர் நீலவானத்து நிலவன், கிழக்கு மாவட்ட செயலாளர் மும்பை அர்ஜீனன், மேற்கு மாவட்ட செயலாளர் முகிலன் ஆகியோர் தலைமை வகித்து பேசினர். சேலம், நாமக்கல் மண்டல துணை செயலாளர் அரசன் முன்னிலை வகித்து பேசினார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இந்திரத்தை பயன்படுத்தாமல் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முன்னாள் மாவட்ட செயலாளர் மணிமாறன், பாவேந்தன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

The post நாமக்கல்லில் விசிக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Vishik ,Namakkal ,Liberation Tigers Party ,Central District ,Neelavanathu Nilavan ,East District ,Mumbai Arjeenan ,West District ,Mukilan ,
× RELATED ஆளுநர் பதவி ஒழிப்பு, வாக்கு சீட்டு...