×

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் கருத்தரங்கு

கோவில்பட்டி, பிப்.24: கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் ரெட் ரிப்பன் கிளப் சார்பில் “வாழ்க்கையை கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை ஐ.சி.டி.சி. ஆலோசகர் ஸ்டீபன் பாக்கியதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்க்கையை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைப்பற்றி பேசினார். மேலும் விகான் ஆதரவு மற்றும் பராமரிப்பு தொண்டு நிறுவன களப்பணியாளர் கணேஷ்குமார் எச்ஐவி பாதிப்பு மற்றும் தடுப்பு முறைகள் குறித்த விபரங்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் சுமார் 150 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் வழிகாட்டுதலின்படி கல்லூரி முதல்வர், ஒருங்கிணைப்பாளர்கள் வீரஜோதி, கோபாலன் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

The post கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் கருத்தரங்கு appeared first on Dinakaran.

Tags : Lakshmi Ammal Polytechnic College ,Kovilpatti ,Celebrate ,Red Ribbon Club ,Rajeswaran ,Kovilpatti Government Head Hospital ,ICTC ,Counselor ,Stephen Pakhithurai ,
× RELATED நத்தம் கோவில்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா