×

அமைச்சர் தகவல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 541 பேருக்கு புற்றுநோய்

சென்னை: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் நேற்று அளித்த பேட்ட: சாயப்பட்டறை, தோல் பதனிடும் தெழிற்சாலைகள், ரப்பர் தொழில் அதிகம் உள்ள மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9,566 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் இதுவரை 541 பேருக்கு புற்றுநோய் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  ராணிப்பேட்டையில் தொடக்க நிலை பாதிப்புகள் உள்ளானவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களை மிக எளிதாக மருத்துவ சிகிச்சைகள் முறைகள் மூலம் காப்பாற்றிட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அமைச்சர் தகவல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 541 பேருக்கு புற்றுநோய் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ranipet district ,Chennai ,People's Welfare Minister ,M. Subramanian ,Minister of Information ,Ranipet ,district ,
× RELATED காவேரிப்பாக்கம் அருகே கோடை வெயில்...