×

முதியவரிடம் ரூ.76,000 அபேஸ்

ஆவடி: வங்கியில் இருந்து எடுத்து வந்த ரூபாய் ரூ.76,000 பணத்தை முதியவரிடம் இருந்து அபேஸ் செய்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆவடி நேரு பஜார் மாருதி காம்ப்ளக்ஸ் சேர்ந்த மகாவீர்சந்த்(62) சர்ஜிகல் எக்யூப்மென்ட்ஸ் விற்பனை செய்து வருகிறார். நேற்று புதிய ராணுவ சாலையில் அமைந்துள்ள இந்தியன் வங்கியில் இருந்து ரூ.76,000 வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக்கொண்டு இவரது மோட்டார் சைக்கிள் வாகனத்தில் பணப்பையை முன்புறம் உள்ள கொக்கியில் மாட்டியுள்ளார்.

பிறகு ஆவடி நேரு பஜார் பகுதியில் பழக்கடையில் பழத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்று பார்த்தபோது முன்புறம் மாட்டியிருந்த பணப்பையை காணவில்லை. அதிர்ச்சியான முதியவர் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆவடி போலீசார் ஆவடி மார்க்கெட் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

The post முதியவரிடம் ரூ.76,000 அபேஸ் appeared first on Dinakaran.

Tags : Avadi ,Mahaveerchand ,Aavadi ,Nehru Bazaar Maruti Complex ,
× RELATED ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட...