×

10ம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வு தொடக்கம்

திருத்தணி:தமிழகம் முழுவதும் பிளஸ் 2 மாணவர்களுக்குப் அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 1 முதல் 22ம் தேதி வரை வரை நடைபெறும் நிலையில், பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 4 முதல் 25ம் தேதி வரையும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல் 8 வரையும் நடத்தத் அரசு தேர்வுத்துறை திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் மாணவர்கள் தேர்வுக்குத் தீவிரமாகத் தயாராகி வருகிறார்கள்.

பொதுத்தேர்வுடன் செய்முறை தேர்வுகளும் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் நிலையில், கடந்த வாரம் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது வெள்ளிக்கிழமை 10ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடங்கியது.
இதில் திருத்தணி அடுத்துள்ள புச்சிரெட்டிப்பள்ளி அரசினர் மேல் நிலை பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 74 மாணவர்கள் நேற்று அறிவியல் செய்முறை தேர்வை எழுதினர்.

இதில் ஆசிரியர் கொடுத்த கேள்விகளுக்கு மாணவர்கள் செய்முறைகளை செய்து காண்பித்தனர். காலை மற்றும் மாலை வேளைகளில் பாடம் வாரியாக செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு வரும் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒரு பிரிவுக்கு 25 முதல் 30 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை விரைவாக முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post 10ம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வு தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...