×

சென்னை மாநகராட்சியில் 500 முக்கிய இடங்களில் இலவச வைபை வசதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி அனைத்து மாநகராட்சிகளிலும் 1000 முக்கிய இடங்களில் இலவச வைபை வசதி வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் 500 முக்கிய இடங்களில் இலவச வைபை வசதி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் 2 நாட்கள் நடத்தப்படும் “Umagine TN” தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, 2024-25ம் ஆண்டு வரவு-செலவு திட்டக்கூட்டத்தொடரில் வெளியிடப்பட்ட சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் 1000 முக்கிய இடங்களில் இலவச வைபை சேவைகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பின்படி, முதற்கட்டமாக சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களான பூங்காக்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் கடற்கரை ஆகிய முக்கிய 500 இடங்களில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் இலவச வைபை வசதி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பழனிவேல் தியாகராஜன், ஒன்றிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளர் தீரஜ்குமார், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அனீஷ் சேகர், மின்னாளுமை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் தலைமை நிர்வாக அதிகாரி பிரவீன் நாயர், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ரமண சரஸ்வதி, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜான் லூயிஸ், மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post சென்னை மாநகராட்சியில் 500 முக்கிய இடங்களில் இலவச வைபை வசதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Chennai… ,Dinakaran ,
× RELATED அம்மா உணவகங்களை தொடர்ந்து சிறப்பாக...