×

குஜராத்தில் ரூ.350 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்: 9 பேர் கைது

வெராவல்: குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் இருந்து ரூ.350 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை காவல்துறை பறிமுதல் செய்தது. கிர் சோம்நாத் மாவட்டம் வெரவல் துறைமுகம் அருகே மீன்பிடி படகுகளில் பலகோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு வெரவல் துறைமுகத்துக்கு வந்த ஒரு மீன்பிடி படகை போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அதில் ரூ.350 கோடி மதிப்புடைய ஹெராயின் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 9 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post குஜராத்தில் ரூ.350 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்: 9 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Veraval ,Gir Somnath district ,Dinakaran ,
× RELATED ரோட்ஷோவில் கூடிய கூட்டத்தால் நல்ல...