×

ஓட்டலில் பாலியல் தொழில் மேற்கு வங்க பாஜ தலைவர் கைது: மேற்கு வங்க போலீஸ் அதிரடி

அவுரா: மேற்கு வங்க மாநிலம் 24 வடக்கு பர்கானாஸ் மாவட்டம் சந்தேஷ்காளி பகுதியை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷாஜகான் ஷேக். ரேஷன் விநியோக முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ஷாஜகான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த சென்றனர்.அப்போது அவரது ஆதரவாளர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளை தாக்கினர். இதில் 3 பேர் காயம் அடைந்தனர். ஷாஜகான் ஷேக்கும் அவரது ஆதரவாளர்களும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர்களை கைது செய்ய வேண்டும் என கோரி பாஜவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட ஷாஜகான் தலைமறைவாக உள்ளார். இந்நிலையில்,சங்ரெய்ல் என்ற இடத்தில் உள்ள ஓட்டலில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில்,பெண்கள்,சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பாஜ விவசாய பிரிவு மாவட்ட தலைவர் சப்யாச்சி கோஷ் உட்பட 10 பேர் சிக்கினர். திரிணாமுல் காங்கிரஸ் டிவிட்டரில் பதிவிடுகையில்,இவர்கள் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது இல்லை, தரகர்களை தான் பாதுகாக்கின்றனர். இதுதான் பாஜ கட்சி என குறிப்பிட்டுள்ளது.

The post ஓட்டலில் பாலியல் தொழில் மேற்கு வங்க பாஜ தலைவர் கைது: மேற்கு வங்க போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.

Tags : West Bengal BJP ,West ,Bengal ,Trinamool Congress ,Shaja Khan Shaikh ,Sandeshkali ,24 ,North Parganas district ,West Bengal ,Enforcement Directorate ,Shahjahan ,Dinakaran ,
× RELATED கடும் வெப்ப அலை: மேற்கு வங்க பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை