×

இறந்த கணவனை பார்க்கபோன மனைவியும் விபத்தில் பலி

 

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், எசையனூரைச் சேர்ந்த பிரகாசம், தனது மனைவி சுந்தரியுடன் ஆற்காடு அடுத்த வேப்பூர் பெரியார் தெருவில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு சுமார் 10.30 மணியளவில் வேலை முடிந்து வீட்டுக்கு பிரகாசம் பைக்கில் சின்ன குக்குண்டி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே வந்த ஜி.எம்.நகர் ஒத்தவாடை தெருவைச் சேர்ந்த ஆதியின் பைக் மோதி சம்பவ இடத்திலே அவர் பலியானார். கணவர் இறந்த செய்தியறிந்த சுந்தரி மகள் வித்யாவுடன் ஆற்காடு நோக்கி மொபட்டில் வந்தபோது தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே வேகத்தடையில் மொபட் ஏறி இறங்கியது. இதில், பின்னால் அமர்ந்து வந்த சுந்தரி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

The post இறந்த கணவனை பார்க்கபோன மனைவியும் விபத்தில் பலி appeared first on Dinakaran.

Tags : Arcot ,Prakasam ,Yesayanur, Ranipet district ,Sundari ,Veypur Periyar Street, Arcot ,Dinakaran ,
× RELATED ஆற்காடு சுற்றுவட்டார பகுதிகளில்...