×

அரசு உதவி பெறும் பள்ளிக்கு காலை உணவு முதல்வருக்கு நன்றி தெரிவித்து 5ம் வகுப்பு மாணவி கடிதம்

நெல்லை: அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் வழங்கப்படும் என்று அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து 5ம் வகுப்பு மாணவி கடிதம் எழுதி உள்ளார்.
தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 17 லட்சம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக, விகேபுரம் டாணா தேசிய துவக்கப்பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவி ஞான ஏஞ்சல் என்பவர் கடந்தாண்டு ஆக.27ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், ‘தாங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தீர்கள். இதேபோன்று அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு வழங்கினால் ஏழை மாணவர்கள் இரண்டு வேளை பசியாற உண்பார்கள்,’ என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசு பள்ளிகளை போன்று அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து மாணவி ஞான ஏஞ்சல் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘அரசு பள்ளியை போன்று அரசு உதவி பெறும் எங்கள் பள்ளிக்கும் காலை உணவு வழங்கினால் ஏழை மாணவர்கள் உணவு உண்பார்கள் என்று நான் தங்களுக்கு கடிதம் எழுதினேன். எங்களது கோரிக்கையை ஏற்று தாங்கள் எங்கள் பள்ளிக்கும் உணவு வழங்குவதாக அறிவித்தது எங்களுக்கு பெரிய மகிழ்ச்சி. எனது நன்றியை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

The post அரசு உதவி பெறும் பள்ளிக்கு காலை உணவு முதல்வருக்கு நன்றி தெரிவித்து 5ம் வகுப்பு மாணவி கடிதம் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Chief Minister ,M.K.Stalin ,Tamil Nadu ,
× RELATED பழைய குற்றாலத்தை சூழல் சுற்றுலா மையமாக மாற்ற முடிவு!