×

விவசாயிகளை தீவிரவாதிகள் போல நடத்தும் ஒன்றிய அரசு: கனிமொழி, பாலகிருஷ்ணன் கடும் தாக்கு

வேலூரில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆட்சியை எப்படி நடத்தியிருக்க வேண்டும் என தெரியாமல் எடப்பாடி தற்போது திமுக ஆட்சி குறித்து விமர்சிக்கிறார். பாஜ அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கும் அனைத்து தரப்பினருக்கும் ஒருவித அழுத்தம் தரப்படுகிறது. டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை ஒன்றிய அரசு தீவிரவாதிகளை போல நடத்துகிறது. விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு போன்றவை நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: போராடும் விவசாயிகளின் நியாயத்தை ஏற்றுக்கொள்ளாமல், பாஜ அரசு விவசாயிகளுக்கு எதிரான கொடூரமான ஆட்சியை நடத்துகிறது. இந்த அரசாங்கம் தீவிரவாதிகளை போல மாறியிருக்கிறது. சர்வாதிகார ஆட்சி நடத்துகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு விவசாயிகள் இறந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் குண்டு காயங்கள் அடைந்துள்ளனர். பலர் பார்வை இழந்துள்ளனர். மோடி அரசின் விவசாய விரோத நடவடிக்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ேபாராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறது. நடைபெற உள்ள தேர்தலில் பாஜ அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பது உறுதி.

The post விவசாயிகளை தீவிரவாதிகள் போல நடத்தும் ஒன்றிய அரசு: கனிமொழி, பாலகிருஷ்ணன் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Union government ,Kanimozhi ,Balakrishnan ,DMK ,general secretary ,Vellore ,Edappadi ,DMK government ,BJP government ,
× RELATED இந்தியா – சீனா எல்லை பிரச்னை குறித்து...