×

உக்ரைன்- ரஷ்யா போர் இன்றுடன் 2ம் ஆண்டு நிறைவு

கீவ்: அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது ரஷ்யாவுக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்த போரில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. இருப்பினும் ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போராடி வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் உதவி அளித்து வருவதால் உக்ரைன் அவ்வப்போது ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. போரில் ராணுவ வீரர்கள் உள்பட 15 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 60 லட்சம் பேர் அகதிகளாகி உள்ளனர். ரஷ்யாவின் கடும் தாக்குதலால் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் சின்னாபின்னமாகியுள்ளன. இந்நிலையில்,போர் தொடங்கி 2 இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. 2 வருட போரில் உக்ரைன் நாட்டினர் 30 ஆயிரம் பேர் மாயமாகியுள்ளனர் என்று அந்த நாட்டின் போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post உக்ரைன்- ரஷ்யா போர் இன்றுடன் 2ம் ஆண்டு நிறைவு appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Russia ,Kiev ,US ,NATO ,Dinakaran ,
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...