×

ஆசிரியர் சேர்க்கைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!

சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான 6 கல்லூரிகளில் ஆசிரியர் தேர்வு அறிவிப்பை எதிர்த்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. காலியாக உள்ள உதவி பேராசிரியர், நூலகர், உடற்கல்வி ஆசிரியர் தேர்வு தொடர்பான அறிவிப்பை எதிர்த்து அறக்கட்டளைக்கு ஐகோர்ட் நியமித்த இடைக்கால நிர்வாகிக்கு பணியிட விளம்பரம் வெளியிட அதிகாரம் இல்லை என வழக்கு தொடரப்பட்டு இருந்தது. முன்னாள் மாணவரான ராமமூர்த்தி தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

The post ஆசிரியர் சேர்க்கைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!! appeared first on Dinakaran.

Tags : ICourt ,CHENNAI ,Chennai High Court ,Pachaiyappan Trust ,Dinakaran ,
× RELATED சிதம்பரம் கோவிலில் பொது தீட்சிதர்கள்...