×

சம்பா கோதுமை ரவா உப்புமா

தேவையானவை

சம்பா கோதுமை ரவை – 1 கப்
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு – தலா 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
கடுகு – உளுந்து – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து.

செய்முறை:

வாணலியில், கோதுமை ரவையை வாசம் வரும் வரை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். பின்னர், அதே வாணலியை வைத்து எண்ணெய்விட்டு, கடுகு உளுந்து தாளிக்கவும். பின்னர், கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு தாளிக்கவும். பருப்பு லேசாக சிவந்தவுடன் நீட்டு வாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிவந்து பொன்னிறமானதும், 1 கப் ரவைக்கு இரண்டரை கப் வீதம் தண்ணீர் சேர்க்கவும். அதனுடன் தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்து வரும்போது வறுத்து வைத்துள்ள ரவையை சிறிது சிறிதாக கட்டித் தட்டாமல் சேர்த்து கிளறி விடவும். பின்னர், 5 நிமிடம் மூடி வைக்கவும். ஐந்து நிமிடம் கழித்து திறந்து கிளறிவிடவும். தண்ணீர் சுண்டி ரவை உதிர் உதிராக ஆனதும், சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழையை தூவி கிளறி இறக்கவும். சுவையான கோதுமை ரவை உப்புமா தயார்.

The post சம்பா கோதுமை ரவா உப்புமா appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இருப்பவல் திருப்புகழ்