×

தஞ்சை அருகே பரபரப்பு 10ம் வகுப்பு மாணவியை கொன்று வாலிபர் தற்கொலை: போலீஸ் விசாரணை

கும்பகோணம்: கும்பகோணம் அடுத்த செம்மங்குடி ஊராட்சி வண்டுவாஞ்சேரி காமராஜர் காலனியை சேர்ந்த மதியழகன் மகன் திலீபன் (20). விவசாய தொழிலாளி. இவர் அதே தெருவை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியுடன் பழகி வந்தார்.

இதையறிந்த திலீபனின் தந்தை, ‘அந்த பெண், உனக்கு தங்கை போன்று உள்ளார். அவருடன் பழகுவதை நிறுத்தி விடு’ என்று கண்டித்தார். அதையும் மீறி இருவரும் பழகினர். இந்நிலையில் நேற்றிரவு 8 மணியளவில் காமராஜர் காலனி அருகே உள்ள நெல் அறுவடை செய்யப்பட்ட வயலுக்கு வருமாறு மாணவியை திலீபன் அழைத்தார். உடனே அவரும் யாருக்கும் தெரியாமல் சென்றார். இந்நிலையில், மாணவியை காணவில்லையே என அவரது தாய் தேடினார்.

அப்போது வயலில் மாணவி, உடலில் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். 50 மீட்டர் தூரத்தில் உள்ள மரத்தில் திலீபன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து மாணவியின் தாய் கூச்சலிட்டார். மக்கள் ஓடி வந்து 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்சில் நாச்சியார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து நாச்சியார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு கிடந்த உடமைகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மாணவியை கொன்று, வாலிபர் தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

The post தஞ்சை அருகே பரபரப்பு 10ம் வகுப்பு மாணவியை கொன்று வாலிபர் தற்கொலை: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Kumbakonam ,Dileepan ,Mathiyalagan ,Vanduvancheri ,Kamaraj ,Colony ,Semmangudi Panchayat ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தேர்தலில் 100%...