×

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

சென்னை: முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பா.வளர்மதி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி ரிஷிகேஷ் ராய் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கு விசாரணை பிப். 27 முதல் தொடங்க இருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்தான் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கில் இருந்து கிழமை நீதிமன்றங்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து தாமாக முன்வந்து மறுளிசாரணைக்கு எடுத்துள்ளார். திமுக அமைச்சர்கள் கே.கேஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர் பொன்முடி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மீதான மேல்முறையீட்டு வழக்குகள் தற்போது சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையிலான அமர்வின் முன்பு நிலுவையில் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் வளர்மதி சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் வளர்மதி விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்டுள்ள மேல்முறையீடு மனுவை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷிற்கு தடை விதித்துள்ளது.

The post முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Former ,Supreme Court ,Valarmati ,Chennai ,Judge ,Rishikesh Rai ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED திறமையானவர்களுக்கு பதவி...