×

தென் தமிழ்நாடு, டெல்டாவில் மழை பெய்ய வாய்ப்பு


சென்னை: தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் இவ்வாறு தெரிவித்துள்ளது.

The post தென் தமிழ்நாடு, டெல்டாவில் மழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : South Tamil Nadu, Delta ,CHENNAI ,Meteorological Department ,South Tamil Nadu ,Delta ,Tamil Nadu ,
× RELATED ஓட்டுப்பதிவின் போது தண்ணீர், குடை எடுத்து செல்லுங்கள்