×

இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேற பாஜக அழுத்தம்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

டெல்லி: இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என பாஜக அழுத்தம் தருவதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. வெளியேறாவிட்டால் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என பாஜக செய்தி அனுப்பி வருகிறது என டெல்லி அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். நாட்டுக்காக கூட்டணியில் இணைந்துள்ளோம்; கைது செய்ய வேண்டுமானால் கைது செய்யட்டும். இன்னும் 2-3 நாட்களில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவார். அமலாக்கத்துறை மட்டுமின்றி சிபிஐ-யும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக ஆதாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது. பாஜகவின் பதற்றம் அதிகரித்து வருவது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது எனவும் கூறினார்.

The post இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேற பாஜக அழுத்தம்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,India alliance ,Delhi ,Atmi ,India ,Delhi Minister ,Saurav Bharatwaj ,Kejriwal ,Dinakaran ,
× RELATED ரொம்ப திட்டுறாங்க ஆபீசர்….தேர்தல் ஆணையத்தில் பா.ஜ பரபரப்பு புகார்