×

பிப்.26 முதல் “இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பிப்.26 முதல் “இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் வீடுவீடாகச் செல்லும் பரப்புரை ஆரம்பமாகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். பா.ஜ.க.அரசின் அநீதிகள், திமுக அரசின் சாதனைகள், பட்ஜெட் அம்சங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும், தேர்தலுக்கு பிறகு பல மாற்றங்களை திமுகவிலும் அரசிலும் எதிர்பார்க்கலாம். மக்களவை தேர்தல் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

 

The post பிப்.26 முதல் “இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,M.K.Stalin ,Stalin ,M. K. Stalin ,DMK ,BJP government ,DMK government ,
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து