×

கரூரில் இரவு நேர டிபன் விற்பனை அமோகம்

*தினமும் ரூ.50 லட்சத்தை தொடும் என கணிப்பு

கரூர் : கரூரில் இரவு நேரம் ஓட்டல்களில் டிபன் விற்பனை அதிகரித்து வருகிறது வீடுகளில் இரவு நேர சமையல் குறைந்ததால் கடைகளில் விற்பனை அதிகரித்து வருகிறது.
இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ உணவு முக்கியமானதாக கருதப்படுகிறது.ஆனால் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. மற்ற உயிரினங்களை விட இரவு நேர உணவு மனிதனுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் பறவைகள் இரவு நேரம் உணவு உண்பதில்லை. இரவு நேரங்களில் பெரும்பாலான மனிதர்கள் டிபன் உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பழைய காலங்களில் வீடுகளில் இரவு நேரங்களில் மாலை உணவாக சமையல் செய்து இரவு 7 மணிக்கு முன்பாகவே சமைத்து உண்பது உண்டு. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.

பெரும்பாலான வீடுகளில் இரவு நேரங்களில் டிபன் செய்வதற்கு பதிலாக பெருநகரங்கள் மற்றும் சிறுநகரங்கள் கிராமங்களில் கூட ஹோட்டல்களில் புரோட்டா, இட்லி, தோசை, டிபன், குஸ்கா, பிரியாணி ஆம்லெட் , சப்பாத்தி ஆகிய உணவுகளுக்கு முக்கியத்துவம் வழங்குகின்றனர். கிராமங்களில் டிபன் விலை குறைவாக கிடைக்கிறது சிறிய கிராமங்களில் தோசை ரூபாய் பத்துக்கும் இட்லி ரூபாய் 6க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் கரூரில் வண்டிகளில் இரண்டு இட்லி 15 ரூபாய் க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு சில கடைகளில் விலை குறைவாக விற்பனை செய்தாலும் கூட உணவு பண்டங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் விலை குறைவாக டிபன் விற்பனை செய்யும் கடைக்காரர்களை கட்டாயப்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்ய கட்டாயப்படுத்துகின்றனர். இந்த நிலை இருந்தாலும் கூட பொதுமக்களும் இரவு நேரங்களில் வீடுகளில் சமையல் செய்வதை நிறுத்திவிட்டு கடைகளில் டிபன் வாங்குவதே விரும்புகின்றனர்.

நான்கு பேர் இருக்கக்கூடிய குடும்பங்களில் ஒரு புரோட்டா ரூபாய் 15 விலையில் பத்து புரோட்டா வாங்கினால் ரூபாய் 150 செலவு செய்து நான்கு பேர்களும் டிபன் சாப்பிடுகின்றனர். சில வீடுகளில் புரோட்டா மட்டும் கடைகளில் வாங்கிக்கொண்டு வீடுகளில் முட்டை வாங்கி ஆம்லெட் போட்டுக் கொள்கின்றனர்.

அதே சமயம் கணவன் ஏதோ வெளியூரிலோ தொழில் நிறுவனங்களில் வேலை செய்தால் அவர் வேலையை முடித்துவிட்டு அவர் கையேந்தி பவன் மற்றும் ஓட்டலில் டிபன் சாப்பிட்டுவிட்டு அதன் பின் 9 மணிக்கு பின்பாக குழந்தைகள் மற்றும் மனைவிக்கு டிபன் வாங்கி செல்கின்றனர். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு கருத்து வேறுபாடு வருவதற்கு முக்கிய காரணமாக வீட்டில் சமைக்க சொல்வது காரணமாக அமைகிறது.

எனவே கணவன்மார்கள் வீட்டில் தேவையில்லாத சண்டையை தவிர்ப்பதற்காக கணவன் கஷ்டப்பட்டு எது எப்படியோ இரவு நேரங்களில் வீடுகளுக்கு மனைவி குழந்தைகளுக்கு தேவையான டிபன்களை வாங்கி செல்கின்றனர்.வீடுகளில் இரவு நேரங்களில் சமையல் செய்வதால் சமையல் செய்வது குறைந்தும் கையேந்துபவன் மற்றும் ஹோட்டல்களில் இரவு நேர டிபன் விற்பனையும் அதிகரித்துள்ளது கண்கூடாக தெரிகிறது எது எப்படியோ வீடுகள் சண்டை சச்சரவு இல்லாமல் இருந்தால் சரிதான். முக்கிய காரணமாக இரவு நேரங்களில் வீடுகளில் சமையல் செய்யச் சொன்னால் அதிக நேரங்கள் சண்டை வருவது தொடர் கதையாக இருக்கிறது.

இந்தத் தேவையில்லாத சண்டையை தவிர்ப்பதற்காகவே கணவன்மார்கள் இரவு நேரங்களில் டிபன் வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.கரூரில் மட்டும் இரவு நேர மற்றும் கடைகள் எண்ணிக்கை கோவை ரோடு பசுபதிபாளையம் வெங்கமேடு வாங்கபாளையம் ராயனூர் தான்தோன்றி ஆகிய பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஒரு சில கடைகளில் மேல்நாட்டு உணவு வகைகள் என பீட்சா, பர்கர் ரொட்டி வகைகள், சைனீஸ் நோய்கள் முழுமையாக விற்பனை செய்யப்படுகிறது.

கரூரில் மட்டும் இரவு நேரங்களில் கடைகளில் டிபன் விற்பனை செய்யும் தொகை கணக்கிட்டு பார்த்தால் ரூபாய் 50 லட்சத்தை தாண்டும் என்பதும் யாருக்கும் தெரியாத ஒரு மறைமுக உண்மையாகும். மேலும் இன்று பல்வேறு ஆன்லைன் உணவு சப்ளை செய்யும் பல்வேறு நிறுவனங்களும் களத்தில் உள்ளதா என்பது குறிப்பிடத்தக்கது.

The post கரூரில் இரவு நேர டிபன் விற்பனை அமோகம் appeared first on Dinakaran.

Tags : Karur ,Dinakaran ,
× RELATED கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் உலா வரும் கால்நடைகள்