×

பிலிப்பைன்ஸில் சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 15 பேர் பலி: மேலும் சிலர் படுகாயம் அடைந்து மருத்துவனையில் அனுமதி

மணிலா: பிலிப்பைன்ஸில் சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிலிப்பைன்சின் நீக்ரோஸ் ஒரியண்டல் மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. மபினாய் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையில் நடந்து சென்றவர்கள் உள்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த சிலருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post பிலிப்பைன்ஸில் சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 15 பேர் பலி: மேலும் சிலர் படுகாயம் அடைந்து மருத்துவனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Philippines ,Manila ,Philippines' Negros Oriental province ,Mabinay ,Dinakaran ,
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...