×

லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது

 

ஈரோடு, பிப்.23: தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனையைத் தடுக்க ஈரோடு மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி,ஈரோடு, கருங்கல்பாளையம் போலீசார் நேற்று தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, வண்டியூரான் கோயில் வீதியில் உள்ள பேக்கரி ஒன்றின் அருகில் 2 நபர்கள், வெள்ளைத் தாளில் எண்களை எழுதிவைத்துக் கொண்டு, லாட்டரி வாங்கினால் நிச்சயம் பரிசு விழும் என கூறி பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்தது தெரியவந்தது.

விசாரணையில், அவர்கள் வண்டியூரான் கோயில் வீதி,எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த வினோத்குமார் (34), கருங்கல்பாளையம், கலைஞர் நகரைச் சேர்ந்த முருகன் (48) என்பது தெரிய வந்தது.இதையடுத்து, போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.மேலும், அவர்களிடமிருந்த கேரள மா நில லாட்டரி சீட்டுகள் 10 மற்றும் இரண்டு செல்போன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

The post லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,district police ,Tamil Nadu government ,Karungalpalayam police ,
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!