×

சிறுபான்மை நலக்குழு தெருமுனை பிரசார கூட்டம்

 

திருச்சி, பிப்.23: திருச்சியில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், மத நல்லிணக்கத்தை சீர் குலைப்பவர்களை தடுத்திடவும், ஒன்றுபட்ட இந்தியா அமைதி பூங்காவாக வலியுறுத்தியும், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் நேற்று தெருமுனை பிரசார கூட்டம் பாலக்கரை எடத்தெரு அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.

பிரசார கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகி அன்வர்உசேன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர் சுரேஷ், மாவட்ட செயலாளர் சார்லஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் சம்பத், எலிசபெத் ராணி, அக்பர்அலி, கெத்தோம் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட துணைத் தலைவர் ஷேக்மொய்தீன் நன்றி கூறினார்.

The post சிறுபான்மை நலக்குழு தெருமுனை பிரசார கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Minority ,Welfare ,Committee ,Trichy ,Tamil Nadu Minority People's Welfare Committee ,India ,Tamil Nadu ,Welfare Committee street campaign ,
× RELATED மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...