×

துறையூர் பகுதியில் 2 பைக்குகள் மோதிய விபத்தில் ஒருவர் பலி

 

துறையூர், பிப்.23: துறையூர் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமம் சிவன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன்(55). இவர் தனது உறவினர் வீட்டுத் திருமண விழாவுக்கு இரு சக்கர வாகனத்தில் நாமக்கல் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

துறையூரில் பெரம்பலூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்திசையில் துறையூரை நோக்கி சிறுநாவலூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஜீவானந்தம் (22) என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயமடைந்த சரவணனை ஆம்புலன்ஸில் துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே சரவணன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

The post துறையூர் பகுதியில் 2 பைக்குகள் மோதிய விபத்தில் ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Dariyur ,Saravanan ,Sivankovil Street, Siruvachur Village, Perambalur District ,Dinakaran ,
× RELATED வாலிபருக்கு அரிவாள் வெட்டு