×

லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி தப்பி ஓடிய லாரி டிரைவருக்கு வலை வந்தவாசி அருகே

வந்தவாசி, பிப்.23: வந்தவாசி அருகே லாரி மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக பலியானார். இதில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம், ஆத்தூர் தாலுகா சிவகண்பூர் கிராமத்தைச்சேர்ந்தவர் கருப்பையா மகன் ஆனந்தராஜ்(28). இவர் சென்னையில் லாரி கிளினராக வேலை செய்து வந்தார். இவரது தாய் குப்பம்மாளுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்தாதால் தாயை பார்க்க தனது நண்பர் பைக்கை வாங்கி கொண்டு நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை- திருக்கோவிலூர் வழியாக செல்ல இவர் வந்தவாசிக்கு காஞ்சிபுரம் நெஞ்சாலை வெண்குன்றம் கிராமம் அருகே வந்துள்ளார்.

அப்போது அங்குள்ள அம்பேத்கர் சிலை முன்பாக உள்ள வேகத்தடையில் முன்னாள் அதிவேகமாக சென்ற லாரி திடீர் என பிரேக் பிடித்ததால் பின்னால் பைக்கில் வந்த ஆனந்தராஜ் பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்தவாசி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்ெபக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கருப்பையா கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு லாரியில் இருந்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

The post லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி தப்பி ஓடிய லாரி டிரைவருக்கு வலை வந்தவாசி அருகே appeared first on Dinakaran.

Tags : Velabandavasi ,Vandavasi ,Perambalur district ,Attur taluka Sivakanpur ,Dinakaran ,
× RELATED அரசு பஸ் கவிழ்ந்து 18 பயணிகள் படுகாயம்; வந்தவாசி அருகே பரபரப்பு