×

வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்

நாமக்கல், பிப்.23: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொருளாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். இணை செயலாளர் தாமோதரன் முன்னிலை வகித்தார். வருவாய்த்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து தாலுகாவிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கு என புதிய துணை தாசில்தார் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்பாடுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். அதேபோல் ராசிபுரத்தில் நடந்த போராட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினர் ராணி தலைமை வகித்தார். போராட்டத்தில், 50க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

The post வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Tamil Nadu Revenue Department Officers Association ,Namakkal District Collector ,Treasurer ,Prakash ,Joint Secretary ,Damodaran ,Dinakaran ,
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை