×

தங்கை திருமணத்திற்கு சென்ற அண்ணன் உட்பட 4 பேர் விபத்தில் பலி

கீழ்பென்னாத்தூர்: விழுப்புரம் மாவட்டம், அசோகபுரம் அடுத்த கஸ்பாகரணை கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன்(28). இவரது தங்கையின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கீழ்பென்னாத்தூர் அடுத்த கள்ளாடிக்குளத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற பாண்டியன், தனது நண்பர்களான அழகன் (37), பிரகாஷ் (34), சிரஞ்சீவி (40) ஆகியோரும் நேற்று அதிகாலை காரில் திருமண மண்டபத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, கீழ்பென்னாத்தூர் அருகே முன்னால் சென்ற டிராக்டரின் பின்புறத்தில் கார் மோதியது. இதில், பாண்டியன், பிரகாஷ், சிரஞ்சீவி, அழகன் ஆகியோர் பலியாகினர். இதேபோல், உறவினர் திருமணத்துக்கு பைக்கில் சென்ற திருவண்ணாமலை மாவட்டம் அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த நெடுஞ்செழியன் மகன் சக்திவேல் (16), உலகம்பட்டை சேர்ந்த ரவி மகன் வசந்தகுமார் (17) ஆகியோர் மரத்தில் மோதியதில் உயிரிழந்தனர்.

The post தங்கை திருமணத்திற்கு சென்ற அண்ணன் உட்பட 4 பேர் விபத்தில் பலி appeared first on Dinakaran.

Tags : KILIPENNATHUR ,Pandian ,Kaspakarani village ,Ashokapuram ,Villupuram district ,Kalladikulam ,Alagan ,
× RELATED கீழ்பென்னாத்தூர் அருகே சாலை...