×

காஷ்மீரில் பயங்கர பனிச்சரிவால் பீதி: ரஷ்ய வீரர் பலி

குல்மார்க்: காஷ்மீரில் பனிப்பொழிவு சீசன் தொடங்கியதைத் தொடர்ந்து, பல நாடுகளில் இருந்து வெளிநாட்டு பயணிகள் குவிந்துள்ளனர். குல்மார்க்கில் 4வது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டிகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில், குல்மார்க்கின் ராணுவ ரிட்ஜ் அருகே அர்வாட் சிகரத்தில் உள்ள கிலான் மார்க் பகுதியில் பிற்பகல் 2 மணி அளவில் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், 7 ரஷ்ய பனிச்சறுக்கு வீரர்கள் மற்றும் உள்ளூர் வழிகாட்டி ஒருவர் சிக்கிக் கொண்டனர். இதில், மாஸ்கோவைச் சேர்ந்த ஹன்டென் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். மற்ற 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

The post காஷ்மீரில் பயங்கர பனிச்சரிவால் பீதி: ரஷ்ய வீரர் பலி appeared first on Dinakaran.

Tags : Avalanche ,Gulmarg ,Kashmir ,4th Gallo India Winter Games ,Kilan ,Arwad ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...