×

பேச்சுவார்த்தைக்கான ஒன்றிய அரசின் அழைப்பை நிராகரித்துவிட்டதாக விவசாய சங்கத்தினர் அறிவிப்பு

டெல்லி: பேச்சுவார்த்தைக்கான ஒன்றிய அரசின் அழைப்பை நிராகரித்துவிட்டதாக விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். “நேற்று மாலை ஒன்றிய அரசிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கான அழைப்பு வந்தது. ஆனால் நாங்கள் அதை நிராகரித்துவிட்டோம். ஒரு புறம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்கள்; மறுபுறம் ரப்பர் தோட்டாக்களை கொண்டு தாக்குகிறார்கள். தற்போதைய சூழலில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சாத்தியம் இல்லை” என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நிலைமையை ஒன்றிய அரசு சீர்செய்த பிறகு, பேச்சுவார்த்தையை தொடங்கலாம் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

The post பேச்சுவார்த்தைக்கான ஒன்றிய அரசின் அழைப்பை நிராகரித்துவிட்டதாக விவசாய சங்கத்தினர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : EU government ,Delhi ,Farmers' Association ,Dinakaran ,
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...