×

டாக்டர் எழுதுவது புரியலையா?.. நோயாளிகளின் மருந்துச் சீட்டில் ‘CAPITAL’ எழுத்துகளில் எழுத உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு அரசு..!!

சென்னை: நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டுகளை எழுதித் தரும்போது CAPITAL எழுத்துகளில் எழுதித் தர வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுவாக உடல் நிலை சரியில்லை என்று டாக்டர்களிடம் போனால் அவர்கள் நம்மைப் பரிசோதனை செய்துவிட்டு மருந்துகளை எழுதித் தருவார்கள். ஆனால், பெரும்பாலான நேரம் அவர்கள் எழுதித் தரும் மருந்துகளைப் பார்த்தாலே நமக்குத் தலைச் சுற்று வந்துவிடும். அந்தளவுக்குத் தான் டாக்டர்கள் கையெழுத்து இருக்கும். அவர்கள் என்ன எழுதித் தருகிறார்கள் என்பது புரியாமல் தான் நாமும் மருந்துகளை வாங்கி சாப்பிடுகிறோம்.

மருந்து சீட்டுக்களில் தெளிவாக எழுதிக் கொடுக்க வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ரூல்ஸ் இருக்கிறது. ஆனால், பெரும்பாலான மருத்துவர்கள் இதைக் கண்டுகொள்வதில்லை. மெடிக்கல்கள் ஊழியர்கள் மட்டும் தான் டாக்டர்கள் எழுதித் தருவது புரிகிறது. இந்நிலையில், இது தொடர்பாக மருத்துவத்துறை புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அதாவது நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டுகளில் மருந்துகளை எழுதித் தரும் போது ஆங்கிலத்தில் CAPTAL எழுத்துகளில் தான் எழுதித் தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. நோயாளிகளுக்குப் புரியும் வகையில் தான் மருந்துகள் பெயர்களை எழுதித் தர வேண்டும் என்று ஒன்றிய அரசு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்த நிலையில், இப்போது தமிழ்நாடு அரசும் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவர்கள், தனியார் மருத்துவர்கள் என அனைத்து மருத்துவர்களும் மருந்து சீட்டுகளில் CAPTAL லெட்டரில் தான் எழுத வேண்டும் என்று மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.

The post டாக்டர் எழுதுவது புரியலையா?.. நோயாளிகளின் மருந்துச் சீட்டில் ‘CAPITAL’ எழுத்துகளில் எழுத உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு அரசு..!! appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu Medical Department ,
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...