×

புதிய சட்டசபை கட்டுமான விவகாரத்தில் புதுவை கவர்னர், சபாநாயகர் மோதல் உச்சம்

புதுச்சேரி: புதுச்சேரியில் தற்போதுள்ள சட்டமன்ற கட்டிடம் பழுதடைந்துள்ளது. இதனால் புதுவை தட்டாஞ்சாவடியில் ரூ.600.37 கோடி செலவில் ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகம் மற்றும் செயலக கட்டிடம் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 5 மாதங்களாக புதிய சட்டமன்றம் கட்டுவதற்கான கோப்பை கவர்னர் தமிழிசை வைத்துள்ளார் என சபாநாயகர் செல்வம் குற்றம் சாட்டினார். ஆனால் கோப்பு தன்னிடம் இல்லை, உள்துறையிடம் உள்ளது என்று கவர்னர் தமிழிசை கூறினார்.

மேலும், இதுகுறித்து கவர்னர் தமிழிசை நேற்று ராஜ்நிவாசில் நடந்த நிகழ்ச்சியின் போது கூறியதாவது: சில நாட்களுக்கு முன்பு சபாநாயகர் செல்வம், புதிதாக சட்டமன்ற கட்டுவதற்கான கோப்பை, கவர்னர் முடக்கி வைத்துள்ளதாக கூறியுள்ளார். அதை வைத்து புதுவை முழுவதும் முக்கிய பேப்பர் இல்லையெனகூறி சிலர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். எந்தவித சுயலாபத்துக்காகவும் கோப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

மக்களின் வரிப்பணம் மிச்சமாக வேண்டும் என்பதற்காக, சட்டசபை கட்டுவதற்கான கோப்பு விவரங்களை பார்த்து கொண்டு இருக்கிறோம். அதில் கூறப்பட்டுள்ள செலவீனம் அதிகமாக உள்ளது. விருந்தினர் உபசரிப்பு தளம், விமான தளம் என அதில் கூறப்பட்டுள்ளது. அது நம்முடைய மாநிலத்துக்கு தேவையான செலவா? என்பதை பார்க்க வேண்டும் என்று காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். இதனால் புதுவை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post புதிய சட்டசபை கட்டுமான விவகாரத்தில் புதுவை கவர்னர், சபாநாயகர் மோதல் உச்சம் appeared first on Dinakaran.

Tags : Puduwa ,Governor ,Puducherry ,Puduvai Thattanjavadi ,
× RELATED அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம்