×

திருச்சி அருகே ஜல்லிக்கட்டு: 650 காளைகள் ஆவேச பாய்ச்சல்

மணப்பாறை: திருச்சி அருகே இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 650 காளைகள் சீறிப்பாய்ந்தன. 350 வீரர்கள் போட்டி போட்டு காளைகளை அடக்கினர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பெரிய குளத்துப்பட்டி புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவையொட்டி ஆலயம் முன்பு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க திருச்சி, தஞ்சை, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 650 காளைகள் அழைத்து வரப்பட்டன. 300 வீரர்கள் பங்கேற்றனர்.

காளைகள், வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. இதைத்தொடர்ந்து வீரர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். கோயில் காளைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வாடிவாசலுக்கு அழைத்து வரப்பட்டது.
தொடர்ந்து காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. போட்டியை ஸ்ரீரங்கம் ஆர்டிஓ தட்சிணாமூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். வாடிவாசல் வழியே முதலில் கோயில் காளைகளும், தொடர்ந்து மற்ற ஊர் காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.

25 பேர் கொண்ட குழுவாக வீரர்கள் களமிறங்கினர். போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். போட்டியில் காளையை அடக்கிய வீரர்கள் மற்றும் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், டேபிள், சேர், மின்விசிறி, வெள்ளி காசு, ரொக்கம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் மணப்பாறை டிஎஸ்பி ராமநாதன் தலைமையில் 250க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

The post திருச்சி அருகே ஜல்லிக்கட்டு: 650 காளைகள் ஆவேச பாய்ச்சல் appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Trichy ,Manaparai ,St. Arogya ,Matha ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகள் அமலில்...