×

கிருஷ்ணராயபுரம் அருகே சின்னசேங்கல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

கிருஷ்ணராயபுரம்; பிப்.22: கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் அருகே சின்னசேங்கல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக மூலவர், அம்பாளுக்கு மற்றும் நந்தி பெருமாளுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், இளநீர், பழங்கள், திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட நந்தி பெருமானுக்கு தீபா ஆராதனை நடைபெற்று. அதனைத் தொடர்ந்து உற்சவர் மூர்த்தியான சுவாமி அம்பாள் கோயில் பிரகாரம் சுற்றி வந்தனர்.இதில் ஏராளமான சிவனடியார்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.அதேபோல் பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் உள்ள ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் கோயில்,மகாதானபுரம் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில், கிருஷ்ணராயபுரம் திருக்கண்மல்லீஸ்வரர் கோயில், லாலாபேட்டை செம்பொற் சோதீஸ்வரர் கோவிலில், கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

The post கிருஷ்ணராயபுரம் அருகே சின்னசேங்கல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Chinnasenkal ,Meenakshi Sundareswarar temple ,Krishnarayapuram ,Chinnasengal Meenakshi Sundareswarar temple ,Krishnarayapuram, Karur district ,Moolavar ,Ambal ,Nandi Perumal ,
× RELATED ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர்...