×

பெண் தீக்குளித்து தற்கொலை போலீஸ் விசாரணை கீழ்பென்னாத்தூர் அருகே

கீழ்பென்னாத்தூர், பிப்.22: கீழ்பென்னாத்தூர் அடுத்த சிறுநாத்தூர் கிராமத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகே சிறுநாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி, ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுமதி (45). இவர் உடல்நலம் பாதித்து அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு சுமதி தீவைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் அவரின் உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் வலி தாங்க முடியாமல் அலறி உள்ளார்.

அப்போது இவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்து அவரை தீக்காயங்களுடன் மீட்டு சிகிச்சைக்கா திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுமதி நேற்று பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து கீழ்பென்னாத்தூர் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

The post பெண் தீக்குளித்து தற்கொலை போலீஸ் விசாரணை கீழ்பென்னாத்தூர் அருகே appeared first on Dinakaran.

Tags : Kilpennathur ,Kilibennathur ,Sirunathur ,Mani ,Kilipennathur ,Tiruvannamalai district ,
× RELATED கர்நாடக போலீஸ் அதிகாரி உட்பட 3 பேரின்...