×

அரசு பள்ளியில் ஆண்டு விழா

திருச்செங்கோடு, பிப்.22: திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியை தமிழினி தலைமை வகித்தார். உதவித்தலைமை ஆசிரியர் மாரிமுத்து வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக நகர்மன்ற தலைவர் நளினிசுரேஷ்பாபு, ஆர்த்தி பரந்தாமன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கும், தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கி பேசினர். அதை தொடர்ந்து, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியம், நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜவேலு, கலையரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post அரசு பள்ளியில் ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Govt ,Tiruchengode ,Tiruchengode Government Girls ,Higher ,Secondary School ,Headmistress ,Tamilini ,Assistant ,Headmaster ,Marimuthu ,Nalinisureshbabu ,Arthi Paranthaman ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்