×

ஊட்டியில் ரூ.5 கோடியில் கட்டப்பட்ட மலை மேலிடப்பயிற்சி மைய கட்டிடம் திறப்பு

ஊட்டி: தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக நீலகிரி மாவட்டம், ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தில், ரூ.5 கோடி மதிப்பீட்டில் (ரூ.3.83 கோடி மதிப்பில் கட்டுமானம் மற்றும் ரூ.1.17 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள்) கட்டப்பட்ட மலை மேலிடப் பயிற்சி மைய கட்டிடத்தினை நேற்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அருணா குத்துவிளக்கேற்றி வைத்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி, கட்டிடத்தினை பார்வையிட்டார்.

The post ஊட்டியில் ரூ.5 கோடியில் கட்டப்பட்ட மலை மேலிடப்பயிற்சி மைய கட்டிடம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Ooty ,Tamil Nadu ,Youth Welfare and Sports Development ,Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,Nilgiris District ,Hills ,Development ,Project Open Air Stadium ,Hill Training Center ,
× RELATED மழை பெய்யாத நிலையில் ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம்