×

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு இன்று தொடக்கம்

சென்னை: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மொழிப்பாட தேர்வு நேற்று தொடங்கின. இந்தி மொழிக்கான இரண்டு தாள்களுக்கான தேர்வுகள் நேற்று நடந்தன. 12ம் வகுப்புக்கான ஆங்கிலப் பாடத் தேர்வு இன்று தொடங்குகிறது. 10ம் வகுப்புக்கான ஆங்கிலப் பாடத் தேர்வு 26ம் தேதி தொடங்குகிறது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 13ம் தேதி வரையும், 12ம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 2ம் தேதி வரையும் நடக்கும். மேற்கண்ட இரண்டு வகுப்புகளுக்கான தேர்வுகளிலும் நாடு முழுவதும் 38 லட்சத்து 82 ஆயிரம் மாணவ மாணவியர் எழுதுகின்றனர். கேள்வித்தாளில் இடம் பெறும் கேள்விகளில் ஏதாவது பாடத்திட்டத்துக்கு வெளியி்ல் இருந்து கேட்கப்பட்டால், அது குறித்து தேர்வு எழுதும் போதே மாணவ, மாணவியர் அறைக்காப்பாளரிடம் தெரிவிக்கலாம். பின்னர் அந்த கேள்விக்கான புதிய மதிப்பெண் திட்டம் வகுக்கப்படும். கேள்வித்தாளில் இடம் பெற்றுள்ள கேள்வியின் தன்மை, வெளியில் இருந்து கேட்கப்பட்டுள்ளதா, கடினமாக இருந்ததா, பிழைகளுடன் இருக்கிறதா, அச்சடித்த தன்மையில் பிழையா, என்பதை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : CBSE ,CHENNAI ,Central Board of Secondary Education ,Dinakaran ,
× RELATED விருகம்பாக்கம் பாலலோக் சிபிஎஸ்இ...