×

மோடிக்கு ஆரம்பமே சரியில்லையே…

தேர்தல் காலம் தொடங்கிவிட்டால், வீதிவீதியாக சென்று ஓட்டு கேட்பதும், நோட்டீஸ் வழங்குவதுமாக நிர்வாகிகள், தொண்டர்கள் பிரசாரத்தை செய்வார்கள். ஆனால் நடந்து சென்ற மக்களை சந்தித்து நோட்டீஸ் கொடுப்பதற்கே ரோபோ மூலம் நோட்டீஸ் கொடுக்க பாஜவினர் செய்த அலப்பறைகள் ஏமாற்றத்தில் முடிந்து உள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வருகிற 27ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இதுகுறித்து நோட்டீசை மக்களிடம் நடந்து சென்ற வழங்க கஷ்டப்பட்ட பாஜவினர், ரோபோ மூலம் நோட்டீஸை வழங்கினர். ஆனால், பிரசாரம் தொடங்கிய சில நிமிடங்களில் ரோபோ பழுதானது. பல்லடம் பொதுக்கூட்டம் மூலம்தான் பாஜவின் தேர்தல் பிரசாரத்தை மோடி தொடங்கி வைக்க உள்ளார். ரோபோ பழுதானதால் ஆரம்பமே சரியில்லையே… என புலம்பியபடி பாஜவினர் இழுத்துச்சென்றனர்.

The post மோடிக்கு ஆரம்பமே சரியில்லையே… appeared first on Dinakaran.

Tags : Modi ,BJP ,Dinakaran ,
× RELATED பழங்குடியின பெண்ணை குடியரசுத்...