×

ஒரே விமானத்தில் வந்த அண்ணாமலை, சுதீஷ்: நடந்தது என்ன?

சென்னையில் இருந்து திருச்சிக்கு நேற்று காலை வந்த விமானத்தில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை மற்றும் தேமுதிக மாநிலத் துணைச் செயலாளர் சுதீஷ் இருவரும் வந்தனர். இதில், சுதீஷ் ரெகுலர் லாஞ்ச் வழியாக வெளியே வந்தார். அடுத்த சில நிமிடங்களில் அண்ணாமலை விஐபி லாஞ்ச் வழியாக வெளியே வந்தார். இதைக் கண்டதும். அவர்களை வரவேற்க வந்திருந்த பாஜ மற்றும் தேமுதிக தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. அண்ணாமலை, சுதீஷ் இருவரும் ஒரே விமானத்தில் பயணம் செய்ததால் இருவரும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேசி இருக்கக் கூடும் என கருதப்படுகிறது. ஆனால் விமானத்தில் சுதீஷ் முன்பக்க இருக்கையிலும், அண்ணாமலை பின்பக்க இருக்கையிலும் அமர்ந்து பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இருவரும் சந்தித்ததற்கான எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தனது கூட்டணி நிலைப்பாட்டினை இன்னமும் அறிவிக்கவில்லை. அதிமுக மற்றும் பாஜ ஆகிய 2 கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திரை மறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இருவரும் ஒரே விமானத்தில் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஒரே விமானத்தில் வந்த அண்ணாமலை, சுதீஷ்: நடந்தது என்ன? appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Sudish ,Tamil ,Nadu ,BJP ,President ,DMD ,State ,Deputy Secretary ,Sutheesh ,Chennai ,Trichy ,
× RELATED தேர்தல் விதிகளை மீறியதாக கோவை தொகுதி...