×

ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: போராடும் ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் இரு வகையான காலகட்டங்களில் நியமிக்கப்பட்ட தங்களுக்கு தகுதி அடிப்படையில் ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை அரசு கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஒரே பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு இருவகையான ஊதியம் வழங்குவது பெரும் அநீதியாகும். தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு போராடுபவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது அதைவிடக் கொடுமையான அநீதியாகும். இதை தமிழக அரசு உணர்ந்து, இடைநிலை ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச வேண்டும்; சமவேலைக்கு சம ஊதியம் என்ற அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

The post ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bhamaka ,Anbumani ,Tamil Nadu ,
× RELATED கோவையில் தேர்தல் பணிகளுக்கு...