×

வெளியூர் பொண்ணுனு சொல்லாதீங்க ப்ளீஸ்: புதுச்சேரியில் போட்டியிட ஆசையை வெளிப்படுத்திய ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் பாஜ வேட்பாளரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. அதே நேரத்தில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட தமிழிசை ஆர்வம் காட்டுவதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் இது வந்ததி என்றவர், தேர்தலில் போட்டியில்லை என்பதை தமிழிசை மறுக்கவில்லை. அது சஸ்பென்ஸ் என்று கூறி வந்தார். இந்நிலையில், புதுச்சேரி ஆளுநராக பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி, சாதனை புத்தகத்தை ஆளுநர் தமிழிசை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

என்னை பொருத்தமட்டில் மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன். என் உள்ள விருப்பம் மக்கள் பிரதிநிதியாவது தான். ஆனால் அதை முடிவு செய்வது ஆண்டவனும் ஆண்டுகொண்டிருப்பவனும் தான் முடிவு செய்ய வேண்டும். நான் தேர்தலில் போட்டியிடப்போகின்றேன் என்று சொல்லவில்லை. அதுவும் புதுச்சேரியில் தான் போட்டியிடப்போகின்றேன் என்று சொல்லவில்லை. ஆனால் அதற்குள் இவள் வெளிமாநிலத்தை சேர்ந்தவள் என்று சொல்கிறார்கள். என்னை வெளிமாநிலத்தை சார்ந்தவள் என்று தயவு செய்து கூறாதீர்கள். தயவு செய்து என்னை வேறுபடுத்தாதீர்கள். அது எனக்கு மனவலியை தருகிறது. புதுச்சேரிக்கு தேவையான அனைத்து பணிகளையும் தொடருவேன். இவ்வாறு அவர் கூறினார். புதுச்சேரியில் மக்கள் பணியை தொடருவேன், வெளியூர்காரர் எனக்கூறாதீர்கள் என்று கூறி வருவது நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்பதை தமிழிசை சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

The post வெளியூர் பொண்ணுனு சொல்லாதீங்க ப்ளீஸ்: புதுச்சேரியில் போட்டியிட ஆசையை வெளிப்படுத்திய ஆளுநர் தமிழிசை appeared first on Dinakaran.

Tags : Governor ,Tamilisai ,Puducherry ,BJP ,Vandathi ,
× RELATED தாமரைக்கு வாக்களித்து என்னை எம்.பி.,...