×

இங்கிலாந்தில் தமிழ்நாடு இளைஞர் மரணத்தில் மர்மம்: கொலை என்ற சந்தேகத்தில் 8 பேர் கைது

லண்டன்: லண்டனில் நடந்த சாலை விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ஓட்டல் மேலாளர் பலியானார். அவரது மரணம் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்தி வரும் போலீசார் 8 பேரை கைது செய்துள்ளனர். கோவை மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் பட்டாபிராமன் (36) லண்டனில் உள்ள பிரபலமான ஒரு தென்னிந்திய உணவகத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். பட்டாபிராமனுக்கு திருமணமாகி ரம்யா என்ற மனைவி உள்ளார். கடந்த 14ம் தேதி ஓட்டல் பணியை முடித்துக் கொண்டு சைக்கிளில் தனது வீட்டிற்கு வந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விக்னேஷ் படுகாயமடைந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்திய தேம்ஸ்வேலி போலீசார் 4 வாலிபர்கள் உட்பட 8 பேரை கைது செய்து காவலில் வைத்துள்ளனர். இதற்கிடையே, உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியை விக்னேஷின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். அதற்காக ஜஸ்ட் கிவ்விங் என்ற கிளவுட் ஃபண்டிங் மூலமாக இதுவரை ரூ.40 லட்சம் திரட்டியுள்ளனர்.

 

The post இங்கிலாந்தில் தமிழ்நாடு இளைஞர் மரணத்தில் மர்மம்: கொலை என்ற சந்தேகத்தில் 8 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,England ,London ,Vignesh Pattabraman ,Coimbatore ,Dinakaran ,
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது