×

சில்லி பாயிண்ட்…

* ஐக்கிய அரபு அமீரக அணியின் (யுஏஇ) தலைமை பயிற்சியாளராக இந்திய அணி முன்னாள் வீரர் லால்சந்த் ராஜ்புட் 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

* கடப்பாவில் நேற்று நடந்த சிகே நாயுடு டிராபி கிரிக்கெட் போட்டியில் ரயில்வே – ஆந்திரா அணிகள் மோதின. ரயில்வேயின் தமன்தீப் சிங் பந்துவீச்சை எதிர்கொண்ட ஆந்திரா தொடக்க வீரர் வம்ஷி கிருஷ்ணா, அந்த ஓவரின் 6 பந்துகளையும் சிக்சர்களாகத் தூக்கி அசத்தினார். ரவி சாஸ்திரி (1985), யுவராஜ் சிங் (2007), ருதுராஜ் கெயிக்வாட் (2022) ஆகியோரைத் தொடர்ந்து இந்த சாதனையை நிகழ்த்தும் 4வது இந்திய வீரர் என்ற பெருமை கிருஷ்ணாவுக்கு கிடைத்துள்ளது.

* டி20 போட்டிகளில் 10,000 ரன் என்ற மைல்கல்லை விரைவாக எட்டிய வீரர் என்ற சாதனை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பாபர் ஆஸமுக்கு கிடைத்துள்ளது (271 இன்னிங்ஸ்). வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கேல் (285 இன்னிங்ஸ்) சாதனையை பாபர் முறியடித்துள்ளார்.

* அருணாச்சல் ஈடா நகர், கோல்டன் ஜூபிலி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கும் 77வது சந்தோஷ் டிராபி கால்பந்து தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கர்நாடகா அணியுடன் டெல்லி அணி மோதுகிறது.

The post சில்லி பாயிண்ட்… appeared first on Dinakaran.

Tags : Lalchand Rajput ,United Arab Emirates ,UAE ,CK Naidu Trophy ,Kadapa, ,Railway ,Dinakaran ,
× RELATED துபாயில் இந்தியர்களுக்கு புதிய...