×

உ.பி.யில் காங்கிரசுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கீடு.. காங்கிரஸ் – சமாஜ்வாதி தொகுதிப் பங்கீடு உடன்பாடு: அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடிந்ததாக அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். தேசிய அளவில் பா.ஜ.,விற்கு எதிராக அமைக்கப்பட்ட I.N.D.I.A. கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. சில கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், சில கட்சிகள் தங்கள் மாநிலத்தில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. உ.பி.,யிலும் சிக்கல் உண்டானது. மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 17 தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்குவதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார். ஆனால், தொகுதிகள் ஒதுக்கீட்டில் பிரச்னை எழுந்ததாக தகவல் வெளியானது. இதனால், கூட்டணி உறுதி ஆகாமல் ராகுலின் பாத யாத்திரையில் பங்கேற்க மாட்டேன் என அகிலேஷ் யாதவ் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் – சமாஜ்வாதி கட்சி இடையே ஏற்பட்டுள்ள தொகுதி உடன்பாடு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ்; தொகுதி பங்கீட்டால் கூட்டணியில் ஏற்பட்டுள்ள சிக்கல் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் – சமாஜ்வாதி கட்சிகளுக்கான கூட்டணி சுமுகமாக முடிந்ததாக அகிலேஷ் யாதவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ரேபரேலி, அமேதி உள்ளிட்ட 17 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சி 62 இடங்களில் போட்டியிடும் என தகவல் வெளியாகி உள்ளது. சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக செய்த தில்லுமுல்லு போல் இதுவரை யாரும் செய்தது இல்லை. பாஜக செய்த தில்லு முல்லு செயல்களை உச்சநீதிமன்றமே உறுதி செய்துள்ளது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் பாஜக துடைத்தெறியப்படும் என்றார். தொகுதிப் பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

The post உ.பி.யில் காங்கிரசுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கீடு.. காங்கிரஸ் – சமாஜ்வாதி தொகுதிப் பங்கீடு உடன்பாடு: அகிலேஷ் யாதவ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,Akhilesh Yadav ,Lucknow ,India ,Uttar Pradesh ,BJP ,UP ,Dinakaran ,
× RELATED மிரட்டல்கள் மூலம் உருவாக்கப்பட்ட...